அலோய்‌ஷியஸ் பாங் மரணம்: அரசியல்வாதிகள் அனுதாபம் 

ராணுவப் பயிற்சியின்போது படுகாயமடைந்து விட்ட நடிகர் அலோய்‌ஷியஸ் பாங் இறந்து விட்ட செய்தி புதன்கிழமை இரவு வெளி யானதை அடுத்து பல அரசியல்வாதிகள், சமூக ஊடகங்களில் அனுதாபம் தெரிவித்து இருக்கிறார்கள். 
முதல் வகுப்பு கார்ப்பரல் (என்எஸ்) பாங் கின் குடும்பத்தார், அன்புக்குரியவர்களிடம், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் சுவிட்சர்லாந் தின் டாவோஸ் நகரிலிருந்து தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார். 
அமைச்சர் தற்போது உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். இதனை அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார். 
தற்காப்பு, வெளியுறவுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், அந்தச் சேவையாளரின் மரணம் அறிந்து தான் மிகவும் துயரமடைந்து விட்டதாக ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார். 
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சேவையாளர் திரு பாங்கின் மரணத்திற்கு முன்னதாக புதன்கிழமை பல விவரங்களைத் தெரிவித் திருந்தார். 
அந்த நடிகரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் நுரையீரல்கள், சிறுநீரகங்கள், இதயம் எல்லாவற்றுக்குமே செயற்கை ஆதரவுக் கருவி  தேவைப்படுவதாக வும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டி ருந்தார். 
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.
“நாட்டிற்குச் சேவையாற்றியபோது திரு பாங் உயிரிழந்து இருக்கிறார். உள்நாட்டுக் கலைஞரான அந்தச் சேவையாளரின் அர்ப் பணிப்பு உணர்வை என்றென்றும் நாம் நினை வில் வைத்திருப்போம்,” என்று அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார். 
இந்தச் சிரமமான நேரத்தை எதிர்நோக்கி இருக்கும் திரு பாங்கின் குடும்பத்தார், நண் பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் திருவாட்டி கிரேஸ் ஃபூ தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார். 
உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக் கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங், சிங்கப்பூர் போலிஸ் படையைச் சேர்ந்த முழுநேர தேசிய சேவையாளர்கள் சிலரை நேற்று சந்தித்தபோது தாம் அவர் களுடன் சேர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி அனுசரித்ததாகத் தெரிவித்தார். 
நாடாளுமன்ற உறுப்பினரான சைனல் சப்பாரி தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார். 
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான பிரித்தம் சிங், ஃபேஸ்புக்கில் தம்மு டைய அனுதாபத்தைத் தெரிவித்திருந்தார். சிங்கப்பூர் மக்கள் கட்சியும் தன் அனுதாபத்தை அந்தச் சேவையாளரின் குடும்பத்திடம் தெரிவித்தது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி