அலோய்‌ஷியஸ் பாங் மரணம்: என் உலகமே போய்விட்டது: சோகத்தில் காதலி உருக்கம்

தன்னுடைய காதலரான நடிகர் அலோய்‌ஷியஸ் பாங் மரணம் அடைந்ததை அடுத்து தன் உல கமே போய்விட்டது என்று அந்த நடிகரின் காதலியான நடிகை ஜேலே ஊ, 27, மிகவும் சோகமாக செய்தி வெளியிட்டு இருக்கிறார். 
நியூசிலாந்தில் சனிக்கிழமை நடந்த ராணுவப் பயிற்சியின்போது காயமடைந்த முதல் வகுப்பு கார்ப்பரல் பாங், புதன்கிழமை இரவு 8.45 மணிக்கு மரணம் அடைந்தார். 
காதலரின் மரணத்தையடுத்து நடிகை ஊ, இன்ஸ்டகிராமில்  தனது சோகத்தை வெளியிட்டார்.
“ஆகஸ்ட் 24 உன் பிறந்தநாள். ஜனவரி 4ஆம் தேதி நம் இருவருக் குமே சிறப்பான ஒரு நாள். ஜனவரி 24ஆம் தேதி என் உலகத்தையே நீ எடுத்துச் சென்றுவிட்டாய். 
“குளிர்ந்து, இறுகிவிட்ட உன் கைகளைத் தான் என்னால் கடை சியாக மருத்துமனையில் தொட்டுப் பார்க்க முடிந்தது. 
‘எனக்குப் பிடித்தமான நான்காம் எண்ணுடன் ஏன் இப்படி எல்லாம் சேர்ந்து நடக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. 
“என்னைத் தனியே விட்டுச் செல்ல உனக்கு எப்படி மனம் வந் தது? எனக்கு ஏன் இந்தக் கதியை ஏற்படுத்திவிட்டாய்? 
“இந்த ஜென்மத்தில் உனக்கு மனைவியாக வாழும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. 
“அடுத்த ஜென்மத்திலாவது நாம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வோம்.