மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங், 37 ஆண்டுகள் கழித்து ட்ரூ & நேப்பியர் சட்ட நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அந்த நிறுவனம் தன் இணையத்தளத்தில் நேற்று இந்த அறிவிப்பை விடுத்தது. வழக்கறிஞர் சிங், சொந்தமாக சட்ட நிறுவனத்தைத் தொடங்கி இளம் வழக்கறிஞர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்து இருப்பதாகவும் திரு சிங்கும் அந்த நிறுவனமும் கூட்டாக விடுத்த அந்த அறிவிப்பு தெரிவித்தது. ட்ரூ & நேப்பியர் நிறுவனத்தின் இயக்குநர்களான ஜெய்காந்த் சங்கர், பர்திப் சிங் கோசா ஆகி யோர் புதிய நிறுவனத்தில் திரு தவீந்தர் சிங்குடன் சேர்வர். ட்ரூ & நேப்பியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் திரு தவிந்தர் சிங், 61, தாமாகவே இரண்டாண்டுகளுக்கு முன் தலைமைத்துவப் புதுப்பிப்பு நடைமுறைகளைத் தொடங்கினார். புதிய தலைமை நிர்வாக அதி காரி ஒருவரை அவர் நியமித்தார். ட்ரூ & நேப்பியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2017 ஆகஸ்ட்டில் மூத்த வழக்கறிஞரான கவிந்தர் புல் நியமிக்கப்பட்டார். அவர் அந்தப் பதவியில் தொடர்வார். துணைத் தலைமை நிர்வாக அதிகாரியான சுஷில் நாயர் உதவியாக இருப்பார். சிங்கப்பூரில் 1997ல் நியமிக்கப்பட்ட முன்னோடி மூத்த வழக் கறிஞர்கள் அணியில் திரு சிங் கும் இடம்பெற்றிருந்தார். திரு சிங், சிங்கப்பூரின் தலைசிறந்த வழக்கறிஞர் என்று கருதப் படுகிறார். அவர் பல விருதுகளை, பாராட்டுகளை, வழக்கு வெற்றி களைப் பெற்றவர்.
சொந்த நிறுவனம் தொடங்கும் தவிந்தர் சிங்
1 mins read

