டாக்சி ஓட்டுநருக்குச் சிறை

இரண்டு டாக்சி ஓட்டுநர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்ச்சண்டை வன்செயலாக மாறியது. 
  அந்த இருவரில் ஒருவர், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பூச்சுமருந்து திரவம் இருந்த ஒரு டப்பாவைக் கொளுத்தி,  தீ மற்றோர் ஆடவரின் மீது படும்படி செய்துவிட்டார். 
அதனால் லாம் சூன் சாய், 61, என்பவருக்கு இடது காது, கன்னம், கழுத்தில் மேலோட்டமாகத் தீப்புண் ஏற்பட்டது. 
தாக்கியதாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இங் சூன் கிம், 65, என்ற டாக்சி ஓட்டுநருக்கு 14 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 18 மாத காலம் எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. 
காயப்படுத்தியதற்காக திரு லாமுக்கு $115 இழப்பீடு கொடுக்கும்படியும் இங்கிற்கு உத்தரவிடப்பட்டது. இந்தச் சம்பவம் 2017 மே 1ஆம் தேதி இரவு சுமார் 8 மணிக்கு       விவோசிட்டி டாக்சி நிறுத்தத்தில் நிகழ்ந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்
ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

09 Dec 2019

ஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்

உதவித் தொகை பெற்ற பிள்ளைகளுடன் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

1,600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி

நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து வலம்) ஸ்டெஃபன் இங், யாஸ்மின் பஷீர், புத்தகத்தைப் புனைந்த ஆலன் ஜான், புத்தகத்தில் உள்ள படங்களை வரைந்த குவேக் ஹோங் ஷின், மோகன் பொன்னிச்சாமி.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

இனுக்காவைப் பற்றிய நூல் ஆகச் சிறந்த நூலாக அறிவிப்பு