வசதிபடைத்தோர் விவாகரத்துக்குத் தனியார் சமரசச் சேவைகளை நாடலாம்

விவாகரத்து செய்துகொள்ள விரும்பும் தம்பதிகள் பணவசதி படைத்தவர்களாக இருந்தால் அவர்களைத் தனியார் சமரச சேவைகளை நாடுமாறு குடும்ப நீதிமன்றங்கள் வலியுறுத்துகின்றன. 
இதன்வழி சமரசம் தொடர்பிலான இலவச வளங்களை வசதி குறைந்த தம்பதிகளுக்காகவும் பிள்ளைகள் தொடர்பான சச்சரவுகளுக்காகவும் பயன்படுத்துவதில் நீதிமன்றங்கள் கவனம் செலுத்தலாம். 
சென்ற ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மொத்த சொத்து மதிப்பு $3 மில்லியனுக்குக் குறைவாக வைத்திருந்த தம்பதிகளால் குடும்ப நீதிமன்றங்களிடமிருந்து இலவசமாகச் சேவை பெற முடிந்தது. இருப்பினும் இவ்வாண்டு தொடக்கம் முதல் இது $2 மில்லியனுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. 
அதற்கு மேல் சொத்து மதிப்பு வைத்திருக்கும் தம்பதிகள் கட்டணம் செலுத்தித் தங்கள் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பர். இதனால் பணவசதி படைத்த தம்பதிகள் சிங்கப்பூர் சமரச நிலையத்தை நாடவேண்டும். சமரசப் பேச்சை நாடும் ஒவ்வொரு முறைக்கும் இரு தரப்பினரும் ஆளுக்கு $3,000 செலுத்தவேண்டும்.