சீனாவின் சாலைத் திட்டம் தொடர்பில் அமைக்கப்படும் புதிய சமரசக் குழு 

சீனாவின் ‘பெல்ட் அன் ரோட்’ எனப்படும் வர்த்தகப் பொருளியல்  திட்டத்தால் ஏற்படக்கூடிய சச்சரவுகளைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க உதவும் குழுவை சிங்கப்பூரும் சீனாவும் அமைக்கத் திட்டமிட்டுள்ளன. இக்குழுவின் உறுப்பினர்கள் அனைத்துலக நிலையில் தேர்வானவர்களாக இருப்பர். சீனா-சிங்கப்பூர் உல களாவிய வர்த்தக சர்ச்சைக்குத் தீர்மானம் காணும் மாநாட்டில் இது தொடர்பான இணக்கக் குறிப்பு நேற்று கையெழுத்தானது.
சீனாவின் வர்த்தகப் பொருளி யல் திட்டத்தில் சம்பந்தப்பட்ட சீனாவையும் சிங்கப்பூரையும் மற்ற பிற நாடுகளையும் சேர்ந்த சமரச நிபுணர்கள் இந்தக் குழுவில் பணியாற்றுவர்.
சிங்கப்பூரும் சீனாவும் இணைந்து எல்லைப்பகுதிகளில் ஏற்படக்கூடிய வர்த்தக சர்ச்சை களுக்குத் தீர்வு காண முடியும் என்று மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் கூறினார். இத்தீர்வு காணும் முறை ஆசிய பண்புகளைப் பிரதிபலிப்பதுடன் ஆசியாவின் தேவைகளுக்கு ஏற்பவும் அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசியாவின் பொருளாதாரங் கள் வளர்ச்சியடைய அதற்கான சட்டச் சேவைகளுக்கான தேவை யும் அதிகரிக்கின்றன. குறிப்பாக மேற்கத்திய வழக்கங்களையோ பண்புகளையோ சாராமல் ஆசிய வட்டாரத்துக்கே உரிய சில சட்டங்கள் தேவைப்படும்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்

24 Mar 2019

பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி