ஜாலான் புசார் விபத்து; முதியவர் காயம்

முறைதவறி சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்த 64 வயது ஆடவர்மீது லாரி ஒன்று மோதியது.  

ஜாலான் புசார் ரோட்டில் நேற்று இந்த விபத்து நடந்தது. உதவிக்கான அழைப்பு காலை 7.20 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த அந்த முதியவர் சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நான்கு தடங்கள் கொண்ட சாலையை முதியவர் இடப்பக்கத்திலிருந்து கடந்து சென்றுகொண்டிருந்தபோது, இடதிலிருந்து இரண்டாவது தடத்தில் சாம்பல் நிற லாரி சென்றுகொண்டிருந்தது. திடீரென அந்த லாரி வலது பக்கத்தில் இருக்கும் தடத்திற்கு மாறிச்சென்றபோது முதியவர்மீது மோதியது.

விபத்தை போலிஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.