ஆகாயவெளி: சிங்கப்பூர், மலேசியா புதிய முடிவு

சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களது புதிய நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத் திருக்கும் காலத்தை மார்ச் மாதம் வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்த யோசனையைத் தாம் ஏற்றுக் கொள்வதாக சிங்கப்பூர் போக்குவரத்து அமைச் சர் கோ பூன் வான் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிலேத்தார் விமான நிலையத்தின் புதிய தரை யிறங்கும் முறையை சிங்கப்பூரும் பாசிர் கூடாங் வான்வெளி கட்டுப்பாட்டு அறிவிப்பை மலேசி யாவும் மார்ச் 31ஆம் தேதி வரையில் நிறுத்தி வைக்க புதிய முடிவு எட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நடவடிக்கைகள் நிறுத்த காலத்தை மே இறுதி வரை நீட்டிக்க சிங்கப்பூர் பரிந்துரைத்திருந்தது. இருப்பினும் புதிய யோச னையை ஏற்று கருத்துத் தெரிவித்துள்ள திரு கோ, “தீர்வை நோக்கி முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ள அம்சங்களை நமது அதிகாரிகள் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட் டுள்ளது நல்ல யோசனை,” என்று குறிப்பிட்டுள் ளார். இந்த முடிவைச் செயல்படுத்தும் வகையில் சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணைய மும் மலேசிய விமானப் போக்குவரத்து ஆணை யமும் மாலை 6 மணியளவில் ஒரே நேரத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக திரு கோ தெரிவித்தார்.