குப்பைகளைச் செல்வமாக மாற்றும் அணுகுமுறை அவசியம்

குப்பையைச் செல்வமாக மாற்றுவது சிங்கப்பூர் மற்றும் இவ்வட்டாரத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வழிவகுக்கும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார். சுற்றுப்புறம் தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்றில் அவர் நேற்று உரையாற்றினார். “புது வகை பொருளியல் வளர்ச்சியை நாடுகள் தழுவிக் கொள்ள வேண்டும். இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் பொருளியல் அணுகுமுறையைவிட மாற்று அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். “குப்பைகளை வளங்களாக மாற்றுவதன் மூலம் பொதுவாக வீசப்படும் பொருட்களைக் கொண்டு புதிய பொருளியல் மதிப்பை உருவாக்கலாம்,” என்றார் அமைச்சர் மசகோஸ். இதிலிருந்து புதிய தொழிற் துறைகள் உருவாகலாம் என்று அவர் கூறினார். புதிய தொழிற்துறைகளில் ஊழியர்கள் புத்தாக்கமிக்க பொருட்களையும் குப்பை மறுபயனீடு செயல்முறையையும் வடிவமைப்பர் என்று அவர் கூறி னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'நிக்கேய் ஏ‌ஷியன் ரிவியூ' செய்தித்தாளுக்கு பேட்டியளித்த பிரதமர் லீ. படம்: தொடர்பு தகவல் அமைச்சு

25 Jun 2019

அமெரிக்காவும் சீனாவும் நம்பிக்கையை ஏற்படுத்த நம்பிக்கை ஏற்படுத்த உயர்மட்டசெயல்பாடு