பயங்கரவாத அச்சுறுத்தல் விழிப்புணர்வு அதிகரிப்பு

எஸ்ஜிசெக்யூர் பற்றிய விழிப்பு உணர்வை அதிகரிப்பதில் கடந்த ஈராண்டுகளில் நல்ல முன்னேற் றம் ஏற்பட்டுள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வது என்பது தனக் குத் தெரியும் என்று அதிகமான சிங்கப்பூரர்கள் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார். நான்கில் மூன்று சிங்கப்பூரர் கள் எஸ்ஜிசெக்யூர் குறித்து அறிந்துள்ளனர் என்றும் உத விக்கு முன்வரும் வகையில் மக் களைத் தயார்ப்படுத்த இன்னும் அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திரு சண்முகம் சொன்னார். “விழிப்புணர்வு கொண்டிருப்ப வர்களாக மட்டுமின்றி செயலில் இறங்கவும் மக்களைக் கடப்பாடு கொண்டவர்களாக ஆக்குவதே நோக்கம்,” என்றார் அவர்.

பொதுமக்களிடையே பயங்கர வாத அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாண்டில் அதிக அளவிலான ‘எஸ்ஜிசெக்யூர்’ நிகழ்ச்சிகள் கடைத்தொகுதிகளி லும் தனியார் கூட்டுரிமை வீடு களிலும் நடத்தப்படவுள்ளன. அவசரகால ஆயத்தங்களுக் கான ஒத்துழைப்பு தொடர்பான சமூக நடவடிக்கை வட்ட மேசை கலந்துரையாடல்களில் ஐந்து தொகுதிகளைச் சேர்ந்த அடித் தள அமைப்புகள், சமூக, சமய அமைப்புகள், வர்த்தகங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் தலை வர்கள் பங்குகொள்வர். முன் னோடித் திட்டமாக இது இடம் பெறும். மருத்துவ உதவி தேவைப்பட் டால் அல்லது சிறிய அளவிலான தீ விபத்துகளின்போது உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள வர்களை விழிப்பூட்ட சிங்கப்பூரர் களுக்கு உதவும் ‘மைரெஸ் பாண்டர்’ கைபேசிச் செயலி, ‘எஸ்ஜிசெக்யூர்’ செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி