அலோய்‌ஷியசுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்

மறைந்த நடிகர் அலோய்சியஸ் பாங்குக்கு அஞ்சலி செலுத்துவதற் காக பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் திரண்டனர். நெருங்கிய நண்பர்கள், குடும் பத்தினர், முக்கியஸ்தர்கள் ஆகி யோருக்காக 82ஏ, மெக்பர்சன் லேனில் திரு பாங்கின் துக்க அனுசரிப்புக்கு நேற்றுக் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப் பினும் அவருக்குத் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்து வதற்காக காலை 10 மணியில் இருந்தே பொதுமக்களும் வரிசை யில் நிற்கத் தொடங்கிவிட்டனர். நண்பகலில் இருந்து பொதுமக்க ளின் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. “அலோய்‌ஷியசுடன் நான் ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனாலும், அவர் பண்பானவர், அடக்கமானவர்,

கடின உழைப் பாளி என்பதை அப்போதே தெரிந்துகொண்டேன்,” என்று கண்ணீருடன் கூறினார் நடிகை ஸே„ டே. தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் ஆகி யோரும் திரு பாங்கிற்குத் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர். பலரும் மலர்க் கொத்து வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று நண்பகல் வரை பொதுமக்கள் அங்கு சென்று திரு பாங்கிற்கு அஞ்சலி செலுத்தலாம். சென்ற வாரம் சனிக்கிழமை நியூசிலாந்தில் ராணுவப் பயிற்சி யில் ஈடுபட்டபோது படுகாயமடைந்த திரு பாங், மருத்துவச் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை இரவு மரணமடைந்தார்.

Loading...
Load next