பல பகுதிகளில் மின்தடை

சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் நேற்று பிற்பகல் சுமார் ஒன்றரை மணி நேரம் மின்சாரம் தடைப்பட் டது. பீஷான், தோ பாயோ, ‌ஷுன்ஃபூ ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற பலரும் தங்கள் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டு விட்டதாகக் கூறினார்கள். மின்தூக்கிகளும் போக்கு வரத்து விளக்குகளும் செயல்பட வில்லை. பாதிக்கப்பட்ட பகுதி களுக்குப் பிற்பகல் 2.58 மணிக்கு மின்சாரம் முற்றிலும் மறுபடியும் கிடைத்துவிட்டதாக எஸ்பி குழுமம் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பிற் பகல் 3.19 மணிக்குத் தெரிவித்தது. மின்தடை பிற்பகல் 1.30க்குத் தொடங்கியது. அங் மோ கியோ, பீஷான், சின் மிங், தாம்சன் ஆகி யப் பகுதிகள் பாதிக்கப்பட்டன.

பிற்பகல் 1.46 மணி முதல் மின் சாரம் கட்டம் கட்டமாக அப்பகுதி களுக்குக் கிடைத்தது. மின்தடை ஏற்பட்டதுமே உடன டியாக அதிகாரிகள் செயலில் இறங்கியதாகவும் கூடுமானவரை விரைவில் மின் விநியோகத்தை மீண்டும் வழக்கநிலைக்கு வரச் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்து வதே முதல் காரியமாக இருந்தது என்றும் எஸ்பி குழுமம் தெரிவித் தது. பிரைட் ஹில் பகுதியில் இருக் கும் துணை மின்நிலையம் ஒன் றில் மூண்ட தீ தான் மின்தடைக் குக் காரணம் என்பது பூர்வாங்க புலன்விசாரணை மூலம் தெரிய வந்தது.2

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி