‘ஃபியர்லஸ்’ கரையோரக் காவல் கப்பல் அறிமுகம்

அறிமுகம் செய்யப்பட்டுள்ள கரையோரக் காவல் கப்பல் ‘ஃபியர்லஸ்’. படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர் குடியரசு கடற்படை யின் எட்டாவது மற்றும் கடைசி கரையோரக் காவல் கப்பல் நேற்று அறிமுகம் செய்து வைக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் கலந்துகொண்டார். ‘ஃபியர்லஸ்’ கப்பலை திரு ஹெங்கின் மனைவியான திருமதி ஹெங் சூன் போ அறிமுகம் செய்து வைத்தார்.
சிங்கப்பூரின் இறையாண் மையைப் பாதுகாக்க வலுவான கடற்படை அவசியம் என்று விழாவில் உரையாற்றி திரு ஹெங் கூறினார்.
“கடற்துறையை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளுக்கு கடற்படைதான் முக்கிய பாது காப்பு. சிங்கப்பூரின் இறையாண் மையைப் பாதுகாக்க வலுவான கடற்படை அவசியம். அதுமட்டு மல்லாது, கடல்வழிப் பாதை களைப் பாதுகாப்பானதாகவும் எவ்வித தடைகளின்றியும் வைத்திருக்க கடற்படையின் பங்கு முக்கியமானது.  மிரட்டல் களைக் கண்டுபிடிக்க ஒவ் வொரு நாளும் 24 மணி நேரத் துக்கு சிங்கப்பூரின் கடற்துறை அமைப்புகள் இணைந்து செயல் படுகின்றன. சிங்கப்பூரின் கடற் பகுதியைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க நமது கடற்படை அயராது சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது,” என்றார் திரு ஹெங்.