அலோய்ஷியஸ் பாங்கிற்கு இறுதி மரியாதை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய சேவைக்குப் பிந்திய ராணுவ பயிற்சியின்போது உயிரிழந்த உள்ளூர் நடிகர் அலோய்ஷியஸ் பாங்கின் நல்லுடல் ராணுவ மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்குக்காக இன்று பிற்பகல் சுமார் 3.30 மணி அளவில் மண்டாய் தகனச் சாலைக்கு அனுப்பப்பட்டது. 

28 வயது திரு பாங், நியூசிலாந்தில் கடந்த சனிக்கிழமையன்று (ஜனவரி 19) நிகழ்ந்த ராணுவப் பயிற்சியின்போது கடுமையாகக் காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் அவர் புதன்கிழமை இறந்தார். 

‘ஹவிட்ஸர்’ கவச வாகனத்திற்குள் முதலாம் வகுப்புக் கார்ப்பரல் (என்எஸ்) பாங், பழுதுபார்ப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது கவச வாகனத்தின் பீரங்கி திடீரென இறக்கப்பட்டது. அப்போது அவர் நெஞ்சிலும் வயிற்றிலும் காயமடைந்ததாக தற்காப்பு அமைச்சுத் தெரிவித்தது.