தலைகீழாய்க் கவிழ்ந்தது வாகனம்; மூன்று பேர் காயம்

கிளமெண்டி மால் கடைத் தொகு திக்கு வெளியில் நடந்த விபத்தில் வாகனம் ஒன்று தலைகுப்புறக் கவிழ்ந்ததில் மூன்று பேர் காய மடைந்தனர்.
கிளமெண்டி அவென்யூ 4ஐயும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் டையும் இணைக்கும் சந்திப்பில் நேற்று நடந்த இந்த விபத்து குறித்து காலை 10.25 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித் தது.
காயமடைந்த இரண்டு பெண் களும் ஆடவர் ஒருவரும் 49 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட வர்கள் என்றும் அவர்கள் அனை வரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுய நினைவு டன் இருந்தாகவும் கூறப்படு கிறது. சிறு காயங்களுக்காக அவர்கள் அங்கு சிகிச்சை பெற்றனர். இதனை குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த விபத்து சம்பவத்தின் காணொளி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. அதில் நீல நிற வாகனம் ஒன்று கிளமெண்டி மால் கடைத் தொகுதியை நோக்கி கிளமெண்டி அவென்யூ 4ல் நேராக சென்று கொண்டிருந்தது. 
அப்போது அந்த வாகனத்தின் இடது பக்கம் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சாலையில் இருந்து அதிவேகமாக வந்த கறுப்பு நிற வாகனம் ஒன்று, சந்திப்பைக் கடந்துகொண்டிருந்த நீலநிற வாகனத்தை மோதித் தள்ளியது. இந்த விபத்தில் நீல நிற வாகனம் சற்றுத் தூரத்திற்கு வேகமாகத் தள்ளப்பட்டு தலைகீழாய்க் கவிழ்ந்தது. 
காயமடைந்த மூவரும் எந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. போலிசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.