ராணுவ மரியாதையுடன் நடந்தது அலோய்‌ஷியஸ் பாங்கின் இறுதிச் சடங்கு

மறைந்த நடிகர் அலோய்‌ஷியஸ் பாங் நியூசிலாந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றபோது அவரைப் பார்க்க முதலில் சென் றவர் அவரது அம்மா. 
அப்போது நினைவுடன் இருந்த அலோய் ‌ஷியஸ், அழுதுகொண்டிருந்த அம்மாவைப் பார்த்து, “அம்மா அழாதீர்கள். நீங்கள் அழுதால் நானும் அழுவேன். நான் கடும் வலியுடன் இருக்கிறேன். சில நாட்களில் குணமாகி விடுவேன். உங்களை நியூசிலாந்தின் காஸி னோ­வுக்கு அழைத்துச் செல்கிறேன்,” என்று கூறினார். மிகுந்த வேதனையை அனுபவித்த போதும் அவரது முதல் அக்கறை அம்மாவாகத்தான் இருந்தது என்று நினைவுகூர்ந்தார் அலோய் ‌ஷியசின் அண்ணன் திரு ஜெஃபர்சன்.

அலோய்‌ஷியசின் இறுதிச் சடங்கில் குடும்பத்தின் சார்பாக பேசிய அவர், அலோய்‌ஷியசில் பலவீனம் அம்மாவின் கண்ணீர் தான் என்றார். 
ராணுவ மரியாதையுடன் பாங்கின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. நேற்றுக் காலையிலும் நேற்று முன்தினமும் 82ஏ, மெக்பர்சன் சாலையிலுள்ள பாங்கின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது நல்லு டலுக்கு  பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்,  ரசிகர்கள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 
பின்னர் நேற்று மாலை 3.30 மணி அளவில் பாங்கின் இறுதிச் சடங்குகள் தொடங்கின. 

தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியை எட்டு சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் வாகனத் தில் ஏற்றினர். பின்னர் வாகனம்  மண்டாய் தகனச்சாலையை அடைந்ததும், மீண்டும் அவர் கள் பெட்டியை உள்ளே சுமந்து சென்றனர்.

குடும்ப உறுப்பினர்கள், உறவி னர்கள், நண்பர்கள், சக கலை ஞர்கள் என 100 பேர் வரை  மண்டாயில் நடந்த இறுதிச் சடங்கு சேவையில் பங்கேற்றனர். மேலும் பீரங்கிப் படையைச் சேர்ந்த 300 வீர்களும் கலந்துகொண்டனர்.தயார்நிலை தேசிய சேவை யாளராக இருந்த 28 வயது முதல் வகுப்பு கார்ப்பரல் பாங் சென்ற வாரம் சனிக்கிழமை நியூசிலாந்தில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட போது படுகாயமடைந்தார். 

மருத்துவச் சிகிச்சை பலனின்றி, நான்கு நாட்கள் கழித்து  புதன் கிழமை இரவு மரணமடைந்தார்.

நியூசிலாந்தின் ‘வையோரு’ பயிற்சித் தளத்தில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட ‘ஹவிட்­ஸர்’ கவச வாகனத்தில் பழுது­ பார்ப்புப் பணிகளை பாங் மேற்கொண்டிருந் தார். 
அப்போது கவச வாக­னத்தின் பீரங்கி இறக்கப்பட்ட போது பாங் அதில் நசுங்கி படுகாயமுற்றார். 
இதில் அவரது நுரையீரல்கள், இதயம், சிறுநீரகம் கடுமையாகக் காயமடைந்தன.