அரசு கணினியைத் தவறாகக் கையாண்டவருக்குச் சிறை

அரசாங்க ஊழியர் ஒருவர், ‘ஐபிபிடி’ என்றழைக்கப்படும் தேசிய சேவையாளர்களுக்கான உடலுறுதித் தேர்வில் இருந்து நிரந்தரமான விலக்கு கிடைத்துள் ளது எனக் காண்பிப்பதற்காக, தனது அலுவலகக் கணினியில் தன்னைப் பற்றிய பதிவு ஆவணங் களில் திருத்தம் செய்துள்ளார். 
சிங்கப்பூர் போலிஸ் படையில் பணிபுரிந்த 27 வயது லபின் இஸ் மாயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்தப் பணியில் இருந்து விலகினார். கடந்த ஜனவரி 17ஆம் தேதி கணினியைத் தவ றாகக் கையாண்டதாக இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 
விசாரணையில் அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒத்துக்கொண்டார். அந்தக் குற்றங்களுக்காக நீதிமன்றம் அவருக்கு இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில், அவர் தன்னைப் பற்றிய ஆவணங் களில் மட்டும் திருத்தம் மேற் கொள்ளவில்லை என்றும் இன் னொருவர் பற்றிய ஆவணங்களை யும் அவருக்குத் தெரியாமல் திருத்தியுள்ளதும் தெரியவந் துள்ளது.
சிங்கப்பூர் போலிஸ் படையில் 2013ல் அரசாங்க அதிகாரியாக பணியில் சேர்ந்தார் லபின். அப் போது அவருக்கு தேசிய சேவை யாளர்கள் குறித்த ஆவணங்களை நிர்வகிக்கும் கட்டமைப்புக் கணினியைப் பயன்படுத்த அங்கீ காரம் அளிக்கப்பட்டது. 
ஏனெனில் அப்போது அவர் செய்த பணிக்கு அது தேவையாக இருந்தது. இதைப் பயன்படுத்தி லபின், 2015ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தனது ஆவணத்தில் திருத்தம் செய்துள்ளார். அத்துடன் இதே போன்ற திருத்தத்தை 2016ஆம் ஆண்டில் இன்னொரு வரின் ஆவணத்திலும் செய்துள் ளார்.