சிங்கப்பூர் 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் ‘கூகல்’ படம்

நவீன சிங்கப்பூர் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் படம் ஒன்றை ‘கூகல்’ இணையத் தேடுதளம் தனது முகப்பில் பதிவேற்றியுள்ளது.

1819ஆம் ஆண்டில் இன்று சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு வந்ததை ‘டூடல்’ எனப்படும் இந்தப் படம் கொண்டாடுகிறது. இதனைக் கொண்டாட இன்று முதல் இவ்வாண்டு முழுவதும்  நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

“2007 முதல் எங்களது ஆசிய-பசிபிக் தலைமையகத்திற்கு சிங்கப்பூர் சிறந்த இல்லமாகத் திகழ்ந்து வருகிறது. பல்வேறு இனங்களையும் கலாசாரங்களையும் கொண்ட சிங்கப்பூர்,   வட்டார அளவில் சிந்தனைகளுக்கான மையமாக வளர்ந்திருப்பதை நாங்கள் காண்கிறோம்,” என்று கூகல் சிங்கப்பூரின் இயக்குநர் ஸ்டெஃபனி டேவிஸ் தெரிவித்தார்.