இன்றைய சிங்கப்பூருக்கு வித்திட்ட 1819

நவீனமயமான புறக்கண்ணோட்டத் துடன் கூடிய பல கலாசார சிங்கப் பூர் உருவாவதற்கு 1819ஆம் ஆண்டே வித்திட்டதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக் கிறார். சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் அவ்வாண்டுதான் இங்கு வந்து சிங்கப்பூரை தாராள துறைமுகமாக ஆக்கினார். இதன் காரணமாக ஏராளமான குடியேறிகள் இங்கு வந்தார்கள். வர்த்தகமே சிங்கப்பூரின் வழி யாகியது. ஏறக்குறைய 150 ஆண்டுகளில் அரசியல் நன்னெறி களும் சமூகங்களுக்கு இடை யிலான உறவுகளும் உலகக் கண் ணோட்டங்களும் உருவாக உதவி கள் கிடைத்தன.

இவற்றின் காரணமாக கடற் பாலத்துக்கு அப்பாலுள்ள சமூகத் திலிருந்து சிங்கப்பூர் வேறுபட்ட தாயிற்று. ஆகையால் 1819 இல்லை என்றால் இன்றைய சிங்கப்பூர் இல்லாமல் இருந்திருக்கக்கூடும். 1965 இடம்பெறாமல் போயிருக்கும். சிங்கப்பூரின் 50 ஆண்டுகால வெற்றிக் கொண்டாட்டமும் இடம் பெறாமல் போயிருக்கும் என்று திரு லீ தெரிவித்தார். ஆசியக் கலாசார அரும் பொருளகத்தில் சிங்கப்பூரின் 200வது ஆண்டுவிழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திரு லீ, சிங்கப்பூரிலிருந்து சிங் கப்பூரராகப் பரிணமித்த பயணத் தைப் பற்றி விவரித்தார்.

700 ஆண்டுகால சிங்கப்பூர் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கற்களைத் திரு லீ தமது உரையில் சுட்டிக்காட்டினார். ராஃபிள்ஸ் இங்கு வந்த போதே சிங்கப்பூரிடம் பலநூறு ஆண்டு கால வரலாறு ஏற்கெனவே இருந்தது என்றார் திரு லீ. கடந்த 14வது நூற்றாண்டில் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரம் செழிப்பான துறைமுகமாக விளங் கியது. அதற்கு தெமாசெக் என்று பெயர். ஏறக்குறைய அந்தக் காலத்தில் சங் நீல உத்தமா இங்கு ஒரு பேரரசை நிறுவினார். அதற்கு சிங்கப்பூரா என்று பெய ரிட்டார்.

பிறகு 16, 17ஆம் நூற்றாண்டு களில் தென்கிழக்காசியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள், சிங்கப் பூரைப் பற்றி தெரிந்துகொண்டனர். பிறகு சுமார் 200 ஆண்டுகள் கழித்து ராஃபிள்ஸ் இங்கு வந்தார். சிங்கப்பூரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் தொடங்கிவைத்த தீர்வை இல்லாத துறைமுகம் சிங் கப்பூரின் வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது. தென்கிழக்கு ஆசியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் குடியேறி கள் வந்தார்கள். மக்கள்தொகை வளர்ந்தது. பல கலாசார, ஒளிவு மறைவு இல்லாத சமூகம் உரு வெடுத்தது. பிறகு பலவற்றிலும் நாடு பல வெற்றிகளைப் பெற்றது என்று திரு லீ குறிப்பிட்டார். 200வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் நாம் ஒன்றாகச் சேர்ந்து தொடர்ந்து முன்னேறுவது எப்படி என்பது குறித்து யோசிப் போம் என்றும் திரு லீ தெரிவித்தார். நாட்டை பிள்ளைகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையும் பலப் படுத்திவரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இப்படி செயல்படும்பட்சத்தில் அடுத்த 50 அல்லது 100 ஆண்டு களில் சிங்கப்பூரர்கள் இன்னும் பணக்காரர்களாக இருப்பர். சிங்கப்பூர் வரலாறும் செறிவுமிக்க தாக இருக்கும் என்றார் அவர்.

 

சிங்கப்பூர் 200வது ஆண்டு விழாவைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங், நாராயண பிள்ளை வருகை முதல் ஸ்ரீ நாராயண மிஷன் அமைந்தது, கடையநல்லூர் ஸ்திரீட் உருவானது வரை பலதரப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளையும் தமது உரையில் குறிப்பிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next