சாதனையைத் தொடரும் சாங்கி விமான நிலையம்

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஆறாவதாக இருக்கும் சாங்கி விமான நிலையம் கடந்த ஆண்டு மற்றொரு சாதனையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு முழுமைக்கும் அந்த விமான நிலையத்தை 65 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ அறிகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 180,000 பயணிகளின் நடமாட்டம் இருந்ததாகத் தெரிகிறது. முந்திய ஆண்டான 2017ல் சாங்கி விமான நிலையம் 62.2 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.