ஆசியானுடன் அதிக நெருக்கம் அவசியம்: மாநாட்டில் தகவல்

ஆசியானோடு நெருக்கத்தை அதிகரிக்கவும் வட்டார நிலவியல் பலன்களைப் பெறும்பொருட்டு அதனைப் புரிந்துகொள்ளவும் வேண்டிய அவசியம் சிங்கப்பூருக்கு  இருப்பதாக பொருளியல் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சிங் காய் ஃபோங் கூறியுள்ளார். திட்ட பரிமாற்றங் களுக்கும் உள்ளகப் பயிற்சிகளுக்கும் பல சிங்கப்பூர் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் ஜகார்த்தா, ஹோ சி மின் சிட்டி ஆகிய நகரங்களில் உள்ளவற் றைக் காட்டிலும் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழ கத்துக்கும் ஐரோப்பிய பல்கலைக் கழகங்களுக்கும் செல்லவே அதி கம் பேர் விரும்புவதாக அவர் சொன்னார்.
 

Loading...
Load next