மனைவியையும் மாற்றான் மகளையும் தாக்கியவருக்கு சிறை

மனைவியையும் மாற்றான் மகளையும் கடுமையாகத் தாக்கிய 35 வயது ஆடவருக்கு நேற்று நீதிமன்றத்தில் 15 வார சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.
குழந்தையைத் துன்புறுத்தி மூர்க்கமாக நடத்திய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண், அவரது மகள் ஆகியோரின் பாதுகாப்பு கருதி ஆடவரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி இரவில் சைனா டவுன் அருகே உள்ள வீட்டில் அந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.