3,700 பெட்டிகளில் கள்ள சிகரெட்

இறக்குமதி வரி தீர்வை, பொருள் சேவை வரி ஆகியவற்றைச் செலுத்தாமல் சுங்கை ஜூரோங் வழியாக 3,740 பெட்டிகளில் கடத்த முயன்ற சிகரெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள்; எஞ்சிய 14 பேரும் இந் தோனீசியர்கள் என்று சிங்கப்பூர் சுங்கத் துறையும் போலிசும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிடிபட்டவர்கள் 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
அந்த சிகரெட்டுகளுக்கான இறக்குமதித் தீர்வை $396,200, ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி $28,820 என மதிப்பிடப்பட்டுள்ளது.