விதிமீறல்: லிட்டில் இந்தியாவில் 10 மதுபானக் கடைகள் சிக்கின

தடை விதிக்கப்பட்ட நேரத்தில் மதுபானம் விற்றதாக லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள பத்து மதுபானக் கடைகள் பிடிபட்டுள் ளன. 
அவ்வட்டாரத்தில் இம்மாதம் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 18 மதுபானக் கடைகளை அதிகாரிகள் சோதனையிட்டதில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பிடிபட்டுள்ள பத்து கடைகளுள் மூன்று ஏற்கெனவே குற்றமிழைத்து சிக்கியவை என்றும் சில கடைகள் கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் கடைகளுக்குள் மது அருந்த வாடிக்கையாளர்களை அனுமதித்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
பத்து கடைகளின் உரிமையாளர்களிடமும் விசாரணை தொடருகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி