சாங்கி விமான நிலையத்திற்குக் கடந்தாண்டு சுமார் 65.6 மில்லியன் பயணிகள் வருகை

சாங்கி விமான நிலையத்திற்குக் கடந்தாண்டு சுமார் 65.6 மில்லியன் பயணிகள் வருகையளித்ததாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை, 2017ஆம் ஆண்டைவிட 5.5 விழுக்காடு அதிகம்.விமானங்களின் புறப்பாடு, தரையிறங்கல் ஆகியவற்றின் எண்ணிக்கை 3.4 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் விமானச் சரக்கின் எடை 1.4 விழுக்காடு அதிகரித்து 2.15 மில்லியன் டன்னாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மற்ற ஆண்டுகளைப் போல் கடந்த ஆண்டிலும் விமான நிலையத்திற்கு ஆக சுறுசுறுப்பான மாதம் டிசம்பர் என்று விமான நிலையக் குழுமம் தெரிவித்தது. டிசம்பரில் 6.13 மில்லியன் பயணிகள் வந்தனர். கடந்தாண்டில் டிசம்பர் 21ஆம் தேதி விமான நிலையத்திற்கு ஆக சுறுசுறுப்பான நாளாக இருந்தது. அன்றைய தினம் 221,155 பயணிகள் சாங்கி விமான நிலையத்திற்கு வந்தனர். சிங்கப்பூருக்கு அதிகமான பயணிகள் வருகை தரும் பத்து நாடுகளில் இந்தியாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் வரும் பயணிகளின் எண்ணிக்கையே ஆக அதிகமாக முறையே 12 விழுக்காடும் 10 விழுக்காடும் வளர்ச்சி அடைந்தன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்