‘டேங் பிளாசா’ அருகே பெரிய பாம்பு

‘டேங் பிளாசா’ கடைத்தொகுதிக்கு அருகில் பெரிய பாம்பு ஒன்று காணப்பட்டதாக அங்கிருந்த சிலர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தனர். 

காலை சுமார் 9 மணிக்கு, கடைத்தொகுதிக்கு அருகே அந்தப் பாம்பு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாம்பைப் பிடிக்க ஐந்து ஆடவர்கள் முயன்றுகொண்டிருந்ததைக் காட்டும் காணொளி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பப்பட்டது. இறுதியாக அவர்கள் பாம்பை  பைக்குள் பிடித்துவைத்தனர். 

(காணொளி இணைப்பு: https://bit.ly/2G9rAb0)

இந்தப் பாம்பு ராஜ மலைப் பாம்பு வகையைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. ஆயினும்,  அந்தப் பாம்பு  குறித்த மேல் விவரம் வெளியிடப்படவில்லை. 

பாம்பைப் பிடித்துக்கொண்டிருந்த ஆடவர்கள் ‘என்டிசிமெக்ஸ்’ பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சட்டைகளை அணிந்திருந்ததாக காணொளியில் தென்பட்டது.