சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றதற்காக சியூ எங் ஹானுக்கு 13 மாதச் சிறை

சட்டவிரோதமாக சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றதற்காக சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தின் முன்னைய தலைவர்களில் ஒருவரான சியூ எங் ஹானுக்கு இன்று 13 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னர் விதிக்கப்பட்டிருந்த மூன்றாண்டு நான்கு மாதச் சிறைத்தண்டனையை முடித்த பின்னர் அவர் இந்தத் தண்டனையை நிறைவேற்றவேண்டும். வெளியேறுவதற்கான அதிகாரபூர்வ இடமாக இல்லாத ஒரு இடத்திலிருந்து சியூ, 58, சிங்கப்பூரைவிட்டு சட்டவிரோதமாக வெளியேறியதாக கடந்தாண்டு டிசம்பரில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க சியூ, கடந்தாண்டு பிப்ரவரி 21ஆம் தேதிப் புலாவ் உபின் படகுத்துறையிலிருந்து படகில் ஜோகூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த  அவரை கடற்காவல் அதிகாரிகள் இடைமறித்து கைது செய்தனர். நீதியைத் திசைத்திருப்ப சியூ முயன்றதாக மாவட்ட நீதிபதி விக்டர் இயோ தீர்ப்பளித்தார்.

சிட்டி ஹார்வஸ்ட் வழக்கில் தனக்கு நியாயம் வழங்கப்பட்டவில்லை என்று நினைத்ததால் சிங்கப்பூரைவிட்டு வெளியேற முடிவு செய்திருந்ததாக சியூ, தன்னை விசாரித்த அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாக அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து தலைவர்கள், நிதி தவறாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் 2017ஆம் ஆண்டில் உறுதிச் செய்தது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது