வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல்  விடுத்த காப்புறுதி முகவருக்குச் சிறை

காப்புறுதித் திட்டங்களை ரத்து செய்த வாடிக்கையாளர் களுக்குப் புனைபெயரில் மிரட்டல் கடிதங்கள் அனுப்பிய முன்னாள் காப்புறுதி முகவருக்கு நேற்று ஈராண்டு, ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
‘ப்ருடென்ஷல்’ நிறுவனத்தில் பணிபுரிந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியும் மியன்மார் நாட்டவருமான யெ லின் மியின்ட், 36, திட்டமிட்டே இச்செயலில் ஈடுபட்டதாக மாவட்ட நீதிபதி மார்வின் பே கூறினார். பாதிக்கப்பட்டோர் போலிசிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து யெ லின் மியின்ட் கைதுசெய்யப்பட்டார். 33 பேர் இவரின் மிரட்டல்களுக்கு ஆளாகினர். $15,000 பிணையில் விடுவிக்கப்பட்ட யெ லின் மியின்ட் அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று சிறைத் தண்டனையைத் தொடங்க அரசு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு இடப்பட்டுள்ளது.          
 

Loading...
Load next