தண்டவாளத்தில் கோளாறு;  வட்டப் பாதையில் தாமதம் 

தண்டவாளக் கோளாற்றினால் ஹார்பர்ஃப்ரண்ட் எம்ஆர்டி நிலையத்தை நோக்கிச் செல்லும் வட்டப் பாதையில் நேற்று பகல் 90 நிமிடங்களுக்குத் தாமதம் ஏற்பட்டது. தெலுக் பிளாங்கா, ஹார்பர்ஃப்ரண்ட் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட அனைத்து நிலையங்களிலும் ரயில் சேவை இல்லை என்றும் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.
போன விஸ்தா, ஹார்பர்ஃப்ரண்ட் நிலையங்களுக்கு இடையே விடப்பட்டுள்ள இலவசப் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்துமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். 
இதற்கிடையே பகல் 1.30 மணிக்குக் கிடைத்த தகவல்படி பழுதுபார்ப்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக நிறுவனம் கூறியது. அதனைத் தொடர்ந்து 2 மணியளவில் தண்டவாளக் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சேவை மறுபடியும் தொடங்கி 20 நிமிடங்களுக்குப் பிறகு வட்டப் பாதையின் ரயில் சேவை வழக்கத்திற்குத் திரும்பியதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் சொன்னது.  

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்