'மரணத்தைப் பற்றி பேசுவது முக்கியம்'

'மரணத்தைப் பற்றி பேசுவது முக்கியம்'

1 mins read

மரணம் தொடர்பான விவகாரங்கள் பற்றி பேசுவது முக்கியம் என்றும் இறுதி நாட்களில் நோயாளிகளின் விருப்பங்களைப் பற்றி அவர்களைப் பராமரிப்போர் அறிந்துகொள்ள இத்தகைய உரையாடல்கள் உத வும் என்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார். நேற்று நொவீனாவில் உள்ள டோவர் பார்க் ஹொஸ்பிசுக்கு சென்றிருந்த அதிபர் இவ்வாறு சொன்னார். கடுமையான, தீராத நோயால் பாதிப்புற்றோருக்கென உள்ள இம்மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள வசதிகளைச் சுற்றிப் பார்த்ததுடன் ஊழியர்கள், நோயாளிகள், அவர்களின் குடும் பத்தினர் ஆகியோரையும் அதிபர் சந்தித்தார். இறப்பைப் பற்றி பேசுவது சிரமமானதாகவும் நம் கலாசாரத் திற்குப் புறம்பானதாகவும் இருந் தாலும், அதன் அவசியத்தை அவர் சுட்டினார். அதிபரின் சமூக ஈடுபாட்டுத் திட்டங்களின் கீழ் மூத்த குடி மக்களைச் சந்தித்துப் பேசுவதில் இந்த வருகையும் அடங்கும். "கட்டுப்படியாகக்கூடிய கட் டணத்தில், எளிதில் கிட்டக்கூடிய தரமான வலிநிவாரணப் பரா மரிப்பு வழங்கத் தொடர்ந்து நாம் வலுவான ஆதரவு கொடுப்போம்," என்றார் திருவாட்டி ஹலிமா.