சீருடை சோதனை குறித்து மன்னிப்பு கேட்டது நன்யாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி

நன்யாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

நன்யாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்  பள்ளிச் சீருடை சோதனையின்போது நடந்த சம்பவத்திற்காகப் பள்ளி மாணவிகளிடமும் அவர்களது பெற்றோரிடமும் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

மாணவிகளின் ஆடைகளைச் சோதித்த பெண் ஆசிரியர், அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக ‘ஷின் மின்’ செய்தித்தாள் தெரிவித்தது. 

நடந்ததை விளக்கும் மின்னஞ்சல் ஒன்றைப் பள்ளி முதல்வர் மாணவிகளின் பெற்றோர் அனைவருக்கும் அனுப்பியுள்ளதாக அப்பள்ளியின் தொடர்பு, மரபு பிரிவின் தலைவர் சாங் போ தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டதாகவும் திரு சாங் சொன்னதாக ‘ஷின் மின்’ கூறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா