‘இரை தேட பாம்பு ஆர்ச்சர்ட் ரோட்டுக்கு வந்திருக்கலாம்’

ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள டேங் கடைத்தொகுதிக்கு அருகில் காணப்பட்ட மூன்று மீட்டர் நீள மலைப்பாம்பு இரை தேடி வடிகால் குழாய்களுக்குள் சுற்றிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக மேலே தரைக்கு வந்திருக்கலாம் என்று விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை சுமார் 9 மணிக்கு மலைப்பாம்பு கல் இருக்கைக்கு கீழ் இருந்ததைக் கண்ட கடைத்தொகுதி வாடிக்கையாளர்கள் வியப்படைந்தனர். ஆயினும், சிங்கப்பூரின் மத்திய பகுதியில் இது போன்ற ராஜ மலைப்பாம்புகள் இருப்பது அரிதல்ல என்று நிபுணர்கள் கூறினர். ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மலைப்பாம்பு எங்கிருந்து வந்தது என்பதை உறுதிசெய்வது கடினம் என்றாலும் அந்த வட்டாரத்திற்கு அருகில் இருக்கும் பூமலை, ஃபோர்ட் கேனிங் ஹில் உள்ளிட்ட மரங்கள் நிறைந்த பகுதிகளிலிருந்து அது வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ராஜ மலைப்பாம்புகள் நகர்ப் பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாறும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் அவை நகர்ப்பகுதிக்குச் செல்லும் சில விலங்குகளைத் தின்பதாகவும் விலங்குநல ஆர்வலர் சங்கர் அனந்தநாராயணன், 24, தெரிவித்தார்.

"அதிக எலிகள் காணப்படக்கூடிய வடிகால் குழாய்களும் கால்வாய்களும் மலைப்பாம்புக்குப் பிடித்த இருப்பிடங்களாக உள்ளன. மலைப்பாம்புகள் தொல்லைகளாகக் கருதப்பட்டாலும் உண்மையிலேயே மனிதர்களுக்குத் தொல்லை கொடுக்கும் விலங்குகளிலிருந்து அவை நம்மைப் பாதுகாக்கிறது," என்று அவர் கூறினார். எலிகள் அளவுக்கு அதிகமாக பெருகாமல் இருக்க இந்தப் பாம்புகள் இருப்பது முக்கியம் என்று திரு சங்கர் கூறினார். சிங்கப்பூரில் 'நார்வே எலி' அதிகமாகக் காணப்படும் இடமாக இருக்கிறது.

ஆர்ச்சர்ட் ரோட்டுக்கு அடியில் கிட்டத்தட்ட 4.7 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்டாம்ஃபர்ட் கால்வாயின் மூலம் பாம்பு டேங் பிளாசாவுக்குச் சென்றிருக்கலாம் என்று வனவிலங்கு நிபுணர் சுபராஜ் ராஜதுறை தெரிவித்தார். தீவின் பல பகுதிகளில் இயற்கை வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வரும் வேளையில் வனவிலங்குகள் வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய நிலையில் இருப்பதாக திரு சுபராஜ் கூறினார். மலைப்பாம்பை பூச்சித்தொல்லை கட்டுப்பாட்டு ஊழியர்கள் கையாண்ட விதமும் குறைகூறப்பட்டு வருகிறது. அந்தப் பாம்பை ஊழியர்கள் முரட்டுத்தனமாகக் கட்டுப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பலர் குறைகூறினர்.

ஏக்கர்ஸ் துணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் கூறுகையில், "இந்தப் பாம்பை அவர்கள் மிதித்ததுமல்லாமல் அதனை முரட்டுத்தனமாகக் கையாண்டனர். பாம்புகள் சட்டத்தால் பாதுகாக்கப்படும் வனவிலங்குகள். அவற்றுக்கு இன்னும் சிறந்த பராமரிப்பு கொடுக்கப்படவேண்டும்", என்றார்.

பாம்புகளைக் கையாள பூச்சித்தொல்லை நிறுவனங்களை அழைக்கக்கூடாது. மாறாக, ஏக்கர்ஸ் அமைப்பைப் பொதுமக்கள் அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!