‘பணிநீக்கத்திலிருந்து பாதுகாக்க சட்டம் உண்டு’

எச்ஐவி கிருமி பாதிப்புக்கு ஆளான ஊழியர்கள் அதன் காரணத்தால் பணிநீக்கம் செய்யப் படுவதிலிருந்து பாதுகாக்கப் படுவர் என மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
எச்ஐவி இருக்கும் ஊழியர் களைப் பாதுகாக்கச் சட்டதிட்டங் கள் நடப்பில் இருப்பதாகவும் இதுவரையில் இதைக் காரணம் காட்டி எந்தப் புகாரோ மேல் முறையீடோ கிடைக்கவில்லை என் றும் அமைச்சு கூறியது.
வேலை நியமனச் சட்டத்தின் கீழ் தவறான காரணத்தின் அடிப் படையில் பணிநீக்கம் செய்யப்படும் ஓர் ஊழியரை மறுபடியும் வேலை யில் அமர்த்துவதுடன் அவர் அந் தக் காலகட்டத்தில் இழந்த வருமானத்தையும் முதலாளி நஷ்ட ஈடாக வழங்கவேண்டும். 
இதற்காக மனிதவள அமைச்சே நிறுவனத்துக் கும் முதலாளிக்கும் உத்தரவு இடும்.
அத்துடன் பணிநீக்கம் செய்யப் பட்டவர் தொழிற்சங்க ஊழியராக இருந்தால், அவர் சார்பாகத் தொழில் துறை சட்டத்தின் கீழ் அவர் இருக்கும் தொழிற்சங்கமே மனிதவள அமைச்சரிடம் மேல் முறையீடு செய்யலாம்.
இதன் தொடர்பில் தகுதி அடிப்படையில் முதலாளிகள் தங் கள் ஊழியர்களை நடத்த வேண் டுமே தவிர, ஊழியருக்கு எச்ஐவி இருப்பதன் அடிப்படையில் பாகு பாடு காட்டவேண்டாம் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வேலை நியமனச் சட்டத்தின் கீழ் வயது, பாலினம், உடல் குறைபாடு, குடும்பப் பொறுப்புகள், குடியுரிமை, கருவுற்ற நிலை, சமயம், இனம், ஆகியவற்றில் பாகுபாடு காட்டிப் பணிநீக்கம் செய்வது தவறு என்று  மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.