வேலை தேடுவோருக்குப் புதிய தொழில்களில் அதிக ஆர்வம்

வேலை தேடுவோரில் அதிக மானோர் புதிய தொழில்களில் வேலைக்கு சேர்வதையே அதிகம் விரும்புவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
கரியர்பில்டர் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனம் சிங்கப்பூரர்கள் விரும் பும் முதலாளிகள் எவர் என்ற ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வில் 2018ஆம் ஆண்டு பங்கேற்றவர்களில் 69 விழுக்காட்டினர் தாங்கள் புதி தாகத் தொழில்களைத் துவங்கு வோரிடமே வேலை செய்ய விரும்புவதாகத் தெரிவித்து உள்ளனர். 
இதுவே 2016ஆம் ஆண்டும் 2017ஆம் ஆண்டு முறையே 59 விழுக்காடாகவும் 68 விழுக் காடாகவும் இருந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு இவர்கள் சொல்லும் முக்கிய காரணங்கள் வேலை யைக் கற்றுக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம், வேலையில் ஆர்வம் மிகுதியாகவும் அதிக ஊக்கத்துடனும் வேலை பார்ப் போருக்கு இடையே வேலை செய் யும் வாய்ப்பு இவற்றுடன் பல வித்தியாசமான பணிகளை ஆற்றக் கிடைக்கும் வாய்ப்பு சேர்ந்துள்ளதே எனத் தெரிவிக் கின்றனர்.
இது இப்படியிருக்க, புதிய தொழில்களில் வேலை செய்யத் தயக்கம் காட்டுவோரில் 78 விழுக்காட்டினர் புதிய தொழிலாக இருப்பதால் வேலை நிரந்தரமாக இருக்குமா எனக் கவலை கொண்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய தொழிலில் சம்பளம் குறைவாக இருக்கக் கூடும் என்பதையும் இவர்கள் காரணமாகக் கூறுகின்றனர்.
இந்த ஆய்வின்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிவதில் முன்பிருந்த ஆர் வம் வேலை தேடுவோரிடையே தற்பொழுது இல்லை என்று தெரி கிறது. 
இதற்குப் பதிலாக, சுகாதாரப் பராமரிப்பு, மருத்துவத் துறை, இவற்றைத் தொடர்ந்து அரசாங்க சேவை, கல்வி, கல்விப் பயிற்சித் துறை ஆகியவற்றைப் புதிதாக வேலை தேடுவோர் நாடிச் செல் வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
உலகப் பொருளியல் வளர்ச் சியின் வேகம் குறைந்து வரும் வேளையில், புதிதாக பட்டப் படிப்பை முடித்தோரிடையே சம்பள எதிர்பார்ப்பும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி