டேங் பிளாசாவில் பாம்பு முரட்டுத்தனமாகக் கையாளப்பட்டது தொடர்பில் விசாரணை 

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ‘டேங் பிளாசா’ கடைத்தொகுதிக்கு வெளியே நேற்று முன்தினம் காணப்பட்ட மூன்று மீட்டர் நீள மலைப்பாம்பு வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத் தால் அகற்றப்பட்டுவிட்டதாகவும் சிங்கப்பூர் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைக் கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையே சம்பவத்தின் போது மலைப்பாம்பைக் கட்டுப் படுத்த அதைப் பூச்சித்தொல்லை கட்டுப்பாட்டு ஊழியர்கள் முரட்டுத் தனமாகக் கையாண்டதாக குறை கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் ஆணையம் விசாரணை ஒன்றைத் தொடங்கி உள்ளது. 
ஏக்கர்ஸ் துணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் கூறு கையில், “இந்தப் பாம்பை அவர்கள் மிதித்ததுமல்லாமல் அதனை முரட் டுத்தனமாகக் கையாண்டனர். பாம்புகள் சட்டத்தால் பாதுகாக்கப் படும் வனவிலங்குகள். அவற் றுக்கு இன்னும் சிறந்த பராமரிப்பு கொடுக்கப்படவேண்டும்,” என் றார்.
பாம்புகளைக் கையாள பூச்சித் தொல்லை நிறுவனங்களை அழைக்கக்கூடாது. மாறாக, ஏக்கர்ஸ் அமைப்பைப் பொதுமக்கள் அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
ஆர்ச்சர்ட் சாலைக்கு அடியில் கிட்டத்தட்ட 4.7 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்டாம்ஃபர்ட் கால் வாயின் மூலம் இரை தேடி பாம்பு டேங் பிளாசாவுக்குச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.