மேல்வீட்டிலிருந்து ரத்தம் சொட்டிய அதிர்ச்சி

தெம்பனிஸ் ஸ்திரீட் 43, புளோக் 440ல் வசிக்கும் 62 வயது திருவாட்டி ஜமிலா, தம் வீட்டில் வீசிய துர்நாற்றம், வீட்டுக் கூரைப் பகுதியிலிருந்து சொட் டிய கருஞ்சிவப்பு நிறத் திரவத் திலிருந்து வந்ததைக் கண்டு பிடித்தார். 
அதைப் பாத்திரத்தில் சொட்ட விட்டதில் ரத்தமாக இருக்கலாம் என்று சந்தேகித்து போலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
  போலிஸ் சோதனையின்போது மாதின் வீட்டுக்கு மேல்வீட்டில் வசித்த 77 வயது ஆடவர் வீட்டில் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர். முதியவரின் மரணம் இயற்கைக்கு மாறான தாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர் பில் வெளியிடப்பட்ட படங்களில் வீட்டுக் கூரையிலிருந்து ரத்தம் சொட்டுவதைக் காணமுடிகிறது.