உருமாறும் ஆர்ச்சர்ட் சாலை

ஆர்ச்சர்ட் சாலையை இன்னும் துடிப்புமிக்கதாக மாற்றும் வகை யில் புதிய திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. மொத்தம் 2.4 கிலோமீட்டர் நீளம் கொண்ட அச்சாலையின் ஒரு பகுதி கார்களற்ற பகுதியாக மாற்றப்படும். இதன்மூலம் அப் பகுதி இஸ்தானா பூங்கா, டோபி காட் கிரீன், பிளாசா சிங்கப் பூராவின் பொதுவெளி ஆகிய வற்றில் உள்ள பசுமைவெளிகளுடன் இணைக்கப்பட்டு, ஒரு பசுஞ்சோலையாகக் காட்சியளிக்கும். ஒரு விளையாட்டுத் திடலையும் கூடாரத்தின்கீழ் நிகழ்ச்சிகள் இடம்பெறுவதற்கான வெளியையும் அது கொண்டிருக்கும்.

சிங்கப்பூரின் வர்த்தக வழித் தடத்திற்குப் புத்துயிரூட்டும் இது போன்ற பல திட்டங்களை அரசாங்க அமைப்புகள் நேற்று அறி வித்தன. ஆறு மாத ஆய்வுக்குப் பின்னும் உரிய பங்காளிகளுடன் ஆலோசித்த பின்னும் இத்திட் டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தங்ளின், சாமர்செட், ஆர்ச் சர்ட், டோபி காட் ஆகிய நான்கு வட்டாரங்களில் புதிய சில்லறை வர்த்தக அம்சங்கள், கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்படும்.  இதன்மூலம் அப்பகுதிகளை இணைக்கும் ஆர்ச்சர்ட் சாலை யின் ‘துடிப்புமிக்க வாழ்க்கைப் பாணி வட்டாரம்’ எனும் நிலை வலுப்பெறும்.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம், தேசிய பூங்கா கழகம் ஆகிய அமைப்புகள் ஒரு கூட்டறிக்கை மூலம் இவ்விவரங்களை வெளியிட்டன.

ஆர்ச்சர்ட் சாலையின் மையப் பகுதி சில்லறை வர்த்தகத்தின் மையமாகத் திகழும். ஆர்ச்சர்ட் பொலிவார்டில் உள்ள அரசாங்கத் திற்குச் சொந்தமான காலியிடங் கள் பல பயன்பாடுகளுக்கும் உகந்த வகையில் கட்டடங்கள் எழுப்பப்படும்.கிளினி சாலை, ஆர்ச்சர்ட் டர்ன் போன்ற பக்கச் சாலைகளும் மேம்படுத்தப்படும். ஆர்ச்சர்ட் சாலை - பேட்டர்சன் சாலைச் சந்திப்புகளைச்  சுற்றுப்பயணிகள் எளிதாகக் கடக்கும் வகையில் மேம்பால நடைபாதைகள் அமைக்கப்படும். வெளிப்புறத் திடல்கள், நிகழ்ச் சிகளுக்காக கூடாரத்துடன் கூடிய மையங்கள் என குடும் பங்களுக்கு உகந்த, கூடிக் களிக்கும் இடமாக டோபி காட் உருமாறும். கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெறும் பலபயன் அக்கம்பக்க வட்டாரமாக தங்ளின் உருப்பெறும்.