எரிவாயு எண்ணெய் சட்டவிரோத பரிவர்த்தனை: 7 பேர் கைது

பூலோவ் சூடோங் அருகே கடலில் 2.7 டன் கடல் எரிவாயு எண் ணெய்யை சட்டவிரோதமாக பரி வர்த்தனை செய்ததாகக் கூறப்பட் டதன் பேரில் ஜனவரி 29ஆம் தேதி ஏழு பேர் கைது செய்யப் பட்டார்கள். போலிஸ் அறிக்கை ஒன்றில் நேற்று இந்த விவரங் களைத் தெரிவித்தது. 
பிடிபட்டவர்களுக்கு வயது 33 முதல் 44 வரை. சிங்கப்பூர் கடல் துறை, துறைமுக ஆணையத்தின் அதிகாரிகளுடன் சேர்ந்து இடம் பெற்ற கூட்டு நடவடிக்கை மூலம் அவர்கள் பிடிபட்டார்கள். பூலோவ் சூடோங் தீவு சிங்கப் பூரின் தென் கடலுக்கு அருகே உள்ள ஒரு சிறு தீவாகும். பிடிபட்டவர்களில் மூவர் கடல் கலன்களுக்கு சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான கலன் ஒன்றின் ஊழி யர்கள். மற்ற நால்வரும் வெளி நாட்டில் பதியப்பட்ட இழுவைப் படகு ஒன்றைச் சேர்ந்தவர்கள்.
சேவை வழங்கும் நிறுவனத் தைச் சேர்ந்த மூவரும் தங்கள் நிறுவனத்திற்குத் தெரியாமல் 2.7 டன் கடல் எரிவாயு எண்ணெய்யை தவறாகக் கையாண்டு இருக்கிறார் கள் என்று கூறப்படுகிறது. 
அந்த எண்ணெய்யை பிறகு அவர்கள் இழுவைப் படகைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் விற்று இருக்கிறார்கள். 
அந்தப் படகு புலன் விசார ணைக்காக பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. 
சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் கடல் எரிபொருள்கள் சட்டவிராத மான முறையில் கையாளப்படுவதை கரையோர போலிஸ் படையும் இந்த ஆணையமும் மிகக் கடுமை யான குற்றச்செயல்களாகக் கருது கின்றன. 
கரையோர காவல் படை தொடர்ந்து அமலாக்க நடவடிக்கை களையும் பாதுகாப்புச் சோதனை களையும் நடத்தி சிங்கப்பூர் கடற் பகுதியில் இத்தகைய சட்ட விரோதக் காரியங்களைத் தடுக் கும். அத்தகைய காரியங்களைத் துடைத்தொழிக்கும்.