50 ஆண்டுகள் ஆனாலும் அதே சீருடை இன்னமும்  பொருத்தம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு ஏறக்குறைய 50 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அந்த நிறுனத்தின் விமான பணிப் பெண்களின் சீருடை இன்னமும் பொருத்தமாகவே இருக்கிறது. 
 இதுவே அந்த நிறுவனத்தை அதன் போட்டி நிறுவனங்களிட மிருந்து வேறுபட்ட, தலைசிறந்த நிறுவனமாகக் காட்டுகிறது. 
இந்த நிறுவனம் தான் நடத்திய மறுபரிசீலனையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எஸ்ஐஏ நிறுவனம் 2017ல் மூன் றாண்டு உருமாற்றச் செயல்திட் டத்தைத் தொடங்கியது. 
அந்தச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பெரிய அளவிலான மறுபரிசீலனையை இந்த நிறுவனம் நடத்தியது. உலகளவில் போட்டி கடுமையாகிவிட்டதால் புதுப்புது சவால்கள் தலையெடுக்கின்றன. 
அவற்றைச் சமாளிக்க வேண்டு மானால் அதற்கேற்ப செவ்வனே மாறிக்கொள்ளவேண்டும் என் பதை உணர்ந்து எஸ்ஐஏ நிறுவனம் செயல்பட தொடங்கி இருக்கிறது. 
மறுபரிசீலனையில் எஸ்ஐஏ நிறுவனத்திற்கே உரிய அதன் விமான ஊழியர்களின் சீருடை இன்னமும் பொருத்தமாகவே இருக்கிறது என்பது தெரியவந் துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் வழங்கி வரும் தலைசிறந்த சேவையும் தொடர வேண்டும்.