உள்வடிவமைப்பாளருக்குத் தண்டனை

உள்வடிவமைப்பு ஊழியர் ஒருவர் தன்னுடைய நிறுவனத் திற்கு முன்பணமாகக் கொடுக்கப்பட்ட $90,000க்கும் மேற்பட்ட தொகையை தனது பையில் போட்டுக்கொண்டார். அதனை அடுத்து அந்த ஊழியர் வேலையிலிருந்து நீக்கப் பட்டார். 
சுவா மின் செர்ன், 39, என்ற அந்த ஊழியர் பிறகு பல வீட்டு உரிமையாளர்களை அணுகி புதுப்பிப்புப் பணிகளைச் செய்து தருவதாக உறுதி கூறி அவர்களிடம் $43,000க்கும் மேற்பட்ட தொகையைப் பெற்றுக்கொண்டார். ஆனால் வேலைகளை அவர் செய்துகொடுக்கவில்லை. 
சுவா ஒன்பது ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளின் பேரிலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் பேரிலும் சென்ற மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு 27 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 
தண்டனை விதிக்கப்பட்டபோது இதர 19 குற்றச் சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 
சுவா 2017 முதல் சென்ற ஆண்டு வரை இந்தக் குற்றச்செயல்களைச் செய்ததாக விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.