பாத்தாம் தீவை சிங்கப்பூருக்குப் போட்டியாக மாற்ற  இந்தோனீசியா விருப்பம்

இந்தோனீசியா தனது பாத்தாம் தீவை சிங்கப்பூருக்குப் போட்டியாக கப்பல், உற்பத்தித் துறை மையமாக்க விரும்பு கிறது. இதற்காக அது US$60 பில்லியன் முதலீட்டைப் பெறும் நோக்கத்துடன் இருக்கிறது. 
பாத்தாம் தீவையும் அதன் அருகில் உள்ள தீவுகளையும் 1970கள் முதல் தொழில்துறை வட்டாரமாக மேம்படுத்த இந்தோனீசிய அரசாங்கம் முயன்று வருகிறது. அதனால் US$20 பில்லியன் முதலீடு களை அது கவர்ந்து இருக்கிறது. 
அந்தப் பகுதி தீர்வையற்ற மண்டலமாக 2007ல் அறிவிக்கப்பட்டது. இப்போது அங்கு மேலும் சுமார் 8,000 ஹெக்டர் பரப்புள்ள நிலப் பகுதியை நிறுவனங்களுக்கு ஒதுக்கித் தர அதிகாரிகள் விரும்புகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
பாத்தாம் மேம்பாட்டு ஆணையத்தை பாத்தாம் நிர்வாகத்தின் கீழ் முற்றிலும் செயல்படும் அமைப்பாக இந்தோனீசிய அதிபர்      ஆக்கி இருக்கிறார். 
இதனையடுத்து பாத்தாம் தீவைச் சிறப்பு பொருளியல் மண்டலமாக உருவாக்க வழி பிறந்து இருக்கிறது.