உலக நிச்சயமில்லா நிலையை சமாளிக்க பட்ஜெட் உதவும்

நிச்சயமில்லாத உலக நிலவரங் களைச் சமாளிக்க சிங்கப்பூர் பொருளியலுக்கு உதவுவதை 2019 வரவுசெலவுத் திட்டத்தின் இலக்காக அரசாங்கம் நிர்ணயிக் கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்து இருக்கிறார்.
  புத்தாக்கம், உலகமயமாதல், ஊழியர்களின் ஆற்றலை மேம் படுத்துவது ஆகியவற்றின் மூலம் அரசாங்கம் இதனைச் செய்யும் என்று இரண்டாவது நிதி, கல்வி அமைச்சருமான அவர் குறிப்பிட் டார். குமாரி இந்திராணி ராஜா, Money FM 89.3 என்ற வானொ லிக்குப் பேட்டி அளித்தார். 
வர்த்தகப் பதற்றங்கள் காரண மாக சீனாவின் பொருளியல் வேகம் குறைந்திருப்பதையும் எதிர் காலத்தில் உலகப் பொருளியலைக் கருமேகம் சூழக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று அனைத்துலக பண நிதியமும் உலக வங்கியும் எச்சரித்து இருப்பதையும் அமைச் சர் சுட்டினார். 
அது மட்டுமின்றி, புதுப்புது தொழில்நுட்பங்கள் காரணமாக ஊழியர்களின் வேலைச் சூழல் பெரும் மாற்றம் அடைவதையும் குமாரி இந்திராணி குறிப்பிட்டார். 
இந்த வகை பொருளியல் நிச் சயமில்லாத நிலையைச் சமாளிக்க உதவும் நமது உத்தியை புதிய வரவுசெலவுத் திட்டம் தொடரும் என்றும் அமைச்சர் கூறினார்.
சிறிய,  நடுத்தர நிறுவனங் களைப் பொறுத்தவரையில் அத் தகைய நிறுவனங்கள், ஆற்றல் மிக்கவையாகத் திகழ உதவுவதே தலைசிறந்த உதவியாக இருக்கும் என்றார் அமைச்சர். 
புதிய வரவுசெலவுத் திட்டம் இத்தகைய நிறுவனங்களுக்கு மேலும் ஊக்கமூட்டும் அம்சங்
களையும் கொண்டிருக்கும் என் றார் அவர். 
தொழில்நுட்ப மாற்றங்களால் வேலை பாணியில் ஏற்படும் மாற் றங்கள் பற்றி கருத்துரைத்த அமைச்சர், ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டம் தொடரும் என்றும் மக்க ளுக்கு மேலும் உதவக்கூடிய வழி கள் பற்றி புதிய வரவுசெலவுத் திட்டம் ஆராயும் என்றும்
கூறினார்.
இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டம், கல்வி, சுகாதாரப் பாதுகாப் பில் ஒருமித்த கவனம் செலுத்தும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறார். 
புதிய வரவுசெலவுத் திட்டம் வசதி குறைந்தவர்களிடம்  ஒரு மித்த கவனத்தைச் செலுத்தும் என்றும் குமாரி இந்திராணி கூறி னார். புதிய திட்டம் இம்மாதம் 18ஆம் தேதி தாக்கலாகிறது.

Loading...
Load next