தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட்  ரயில் பணிகள் கண்காட்சி

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வழித்தடத்தின் கட்டுமானப் பணி களைக் காட்டும் புகைப்படக் கண் காட்சி ஒன்று இப்போது பூகிஸ் மற்றும் ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலை யங்களில் நடக்கிறது. இவற்றை முறையே, பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 31 வரை காணலாம். 
‘முற்றிலுமான காட்சி’ என்ற தலைப்புடன் கூடிய அந்தக் கண் காட்சியில் சுமார் 40 புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. 
அந்தப் படங்கள் பிடோக், தெம்பனிஸ், டோபி காட், பிடோக் ரெசர்வோர், பாய லேபார், பென் கூலன், உட்லண்ட்ஸ் ஆகிய நிலையங்களில் மே மாதத்திற்கு முன் காட்சிக்கு இடம்பெறும். 
நிலப் போக்குவரத்து ஆணை யமும் ‘கேனன் சிங்கப்பூர்’ நிறு வனமும் சேர்ந்து இந்தக் கண் காட்சியை நடத்துகின்றன.