‘கசிந்த எச்ஐவி தகவல்களைப் பயன்படுத்தமாட்டோம்’

இணையத்தில் கசிந்துவிட்ட எச்ஐவி தகவல்களை எந்தவொரு நோக்கத்திற்கும் பயன்படுத்தமாட் டோம் என்று சிங்கப்பூரில் உள்ள காப்புறுதி நிறுவனங்கள் உறுதி தெரிவித்து இருக்கின்றன. 
ஆயுள் காப்புறுதிச் சங்கம் நேற்று அறிக்கை ஒன்றை வெளி யிட்டது. காப்புறுதித் துறையினர் திருடப்பட்ட தகவல் எதையும் பயன்படுத்தமாட்டார்கள் என்று காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு அந்தச் சங்கம் உறுதி அளித்தது. 
இந்த உறுதிமொழியின் கார ணமாக, எச்ஐவி பதிவேட்டில் இடம்பெற்றிருப்போர் தங்களுடைய ஆயுள் அல்லது சுகாதார காப் புறுதிப் பாதுகாப்புக்கு எந்த வழி யிலும் எந்த பாதிப்பும் வராது என்று நிம்மதியாக இருக்கலாம். 
இத்தகைய தகவல்கள் வேண்டுமென்றே ஆயுள் காப்புறுதி யாளர்களுக்கு அனுப்பப்பட்டால் அவர்கள், தகவல்களைப் பயன் படுத்தமாட்டார்கள். அது பற்றி உடனடியாக அவர்கள் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து விடுவார்கள் என்றும் அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
சிங்கப்பூரில் எச்ஐவி பதிவேட் டில் இடம்பெற்றிருந்த 14,200 பேரின் பெயர்கள், தொடர்பு விவ ரங்கள் ஆகியவை 2012 மார்ச் மாதத்திற்கும் 2016 மே மாதத்திற் கும் இடையில் சுகாதார அமைச் சிடமிருந்து திருடப்பட்டுவிட்டன. 
அந்த 14,200 பேரில் சிங்கப்பூரர் களும் வெளிநாட்டினரும் அடங்கு வர்.  இணையத்தில் இந்தத் தக வல்கள் வெளியானதைப் பற்றி சென்ற மாதம் பொதுமக்களுக்குத் தெரியவந்தது. பிறகு அந்தத் தக வல்களை யாரும் எட்ட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுவிட்டது. 
இருந்தாலும் திருடப்பட்டுவிட்ட தகவல்கள், இன்னமும் மீட்கப்படா மலேயே இருக்கின்றன. எச்ஐவி பதிவேட்டில் இடம்பெற்று இருக்கும் சுமார் 3,500 சிங்கப்பூரர்கள் மற் றும் நிரந்தரவாசிகள் இன்னமும் உயிரோடு உள்ளனர். லெர் டெக் சியாங் என்ற மருத்துவர், அந்தத் தகவல்களை அமைச்சிடமிருந்து திருடிவிட்டதாக தெரியவந்தது. 
மருத்துவர் லெர்க்கு அமெரிக்கர் ஒருவர் காதலனாக இருந்தார். அந்தக் காதலர் எச்ஐவி ரகசிய தகவல்களை இணையத்தில் பதி வேற்றிவிட்டார். 
தகவல்கள் கசிந்துவிட்டதன் காரணமாக யாரும் பாரபட்சமாக நடத்தப்படமாட்டார்கள் என்று ஆயுள் காப்புறுதிச் சங்கம் உறுதி கூறியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி எடுக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

22 Apr 2019

கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

ஹோங் கா நார்த் தொகுதியில் நேற்று நடைபெற்ற டெங்கிக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இளைய தொண்டூழியர் ஒருவர், முதிய குடியிருப்பாளர் ஒருவருக்கு டெங்கி தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

22 Apr 2019

டெங்கி சம்பவங்கள் மும்மடங்கு அதிகரிப்பு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’