சந்தேகப்பேர்வழிகள் 117 பேர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, ஜனவரி 21 முதல் நேற்று வரை எடுத்த நாடு தழுவிய நடவடிக்கைகளில் 117 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மொத்தம் 280 கிராம் ஐஸ், 13 கிராம் ஹெராயின்,     27 கிராம் கஞ்சா, 2,234 எரிமின்-5 மாத்திரைகள், 41 எக்ஸ் டசி மாத்திரைகள் ஆகியவை சோதனையில் பிடிபட்டன. 
சிங்கப்பூர் போலிஸ் உதவியுடன் பிடோக், புவாங்கோக், புக்கிட் பாத்தோக், காமன்வெல்த், ஜூரோங், பாசிர் ரிஸ், சிராங்கூன், தெம்பனிஸ், ஈசூன் ஆகிய பகுதிகளில் சோதனை நடந்தது. புலன்விசாரணை நடப்பதாக இந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகாரிகள் ஜனவரி 28ஆம் தேதி ஒரு தம்பதியைப் பிடித்தனர். சிங்கப்பூரர்களான அந்தத் தம்பதியர் தங்கள் 10 மாத கைக்குழந்தையுடன் அங்கும் இங்கும் மாறிமாறி போலிசிடமிருந்து தப்பி வந்தனர். 
அத்தம்பதியரில் ஒருவரான 31 வயது மாது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப் படுகிறது. போலிசிடம் அந்தத் தம்பதியர் பிடிபட்டபோது அவர்களின் கைக்குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் இருந்தது. அதிகாரிகள் அந்தக் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி