பிப்ரவரி 17 முதல் மார்க்கெட் ஸ்திரீட்டின் ஒரு பகுதி மூடப்படும்

மார்க்கெட் ஸ்திரீட்டின் ஒரு பகுதி பிப்ரவரி 17 முதல் போக்குவரத்திற்கு நிரந்தரமாக மூடப்படுகிறது. அங்கு 1,000 சதுர மீ. பரப்பளவில் பொதுப் பூங்காவை அமைக்கப் பணிகள் தொடங்குகின்றன.
சூலியா ஸ்திரீட்டை நோக்கி சர்ச் ஸ்திரீட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், சிசில் ஸ்திரீட் சந்திப்பிற்குப் பிறகு டி’அல்மெய்டா ஸ்திரீட்டைப் பயன்படுத்தவேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 
எண் 88, மார்க்கெட் ஸ்திரீட்டில் கேப்பிட்டாஸ்பிரிங் என்ற 51 மாடி கட்டடம் எழும்புகிறது. அந்தப் பகுதியை பசுமையாக்கும் முயற்சியாக, அதனுடன் சேர்ந்து பொதுப் பூங்காவை அங்கு அரசாங்கம் அமைக்கிறது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'நிக்கேய் ஏ‌ஷியன் ரிவியூ' செய்தித்தாளுக்கு பேட்டியளித்த பிரதமர் லீ. படம்: தொடர்பு தகவல் அமைச்சு

25 Jun 2019

அமெரிக்காவும் சீனாவும் நம்பிக்கையை ஏற்படுத்த நம்பிக்கை ஏற்படுத்த உயர்மட்டசெயல்பாடு