தொண்டூழிய பணியில் வினோதம்;  செங்காங்கில் உதவிய கூட்டுக் குழு

செங்காங்கில் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு உதவும் வகை யில் மளிகைப்பொருட்களை பையில் போட்டு அவற்றை விநி யோகித்த ஒரு தொண்டூழியக் குழு, தனிச் சிறப்புமிக்க வகையில் அமைந்திருந்தது. 
பள்ளிவாசல், தேவாலயம், சைக்கிள் ஆர்வலர் குழு, அடித் தள அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டூழியர்கள் ஒன் றாகச் சேர்ந்து உதவிக்குக் கை கொடுத்தனர். 
‘செங்காங்கின் நினைவுப் பொருட்கள் திட்டம்’ என்று குறிப் பிடப்பட்ட அந்த உதவித் திட்டம் பல அமைப்புகளுக்கு இடையில் இடம்பெற்ற வினோதமான கூட்டுத் திட்டமாக அமைந்தது. 
செங்காங் மேற்கு குடிமக்கள் ஆலோசனைக் குழு, அல்=மவத்தா பள்ளிவாசல், தி சர்ச் ஆஃப் ஜீசஸ் கிறிஸ்ட் ஆஃப் லேட்டர்=டே செயின்ட்ஸ், ரைடு ஆஃப் ஹோப் என்ற சைக்கிள் ஆர்வலர் குழு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட அந்த கூட்டுத் தொண்டூழிய முயற்சி நாடளாவிய எஸ்ஜி கேர்ஸ் (SG Cares) திட்டத்திற்கு ஆதர வாக இடம்பெற்றது. 
இந்தத் திட்டம் 2018ல் தொடங்கி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.  சுகாதார, போக்கு வரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் உட னிருக்க சுமார் 150 தொண்டூழியர் கள், மளிகைப்பொருட்களைப் பைகளில் அடைத்து உதவினர். அவை புளோக் 350 ஆங்கோர்வேல் ரோட்டில் வசிக்கும் ஏறக்குறைய 300 குடும்பங்களுக்கு விநி யோகிக்கப்பட்டன. 
டாக்டர் லாம், செங்காங் மேற்கு அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகராகவும் இருக்கிறார். 
மேற்சொன்ன தேவாலயத்தின் உறுப்பினரான விக்டர் சான் என் பவர், ஒரு தொண்டூழியர்.