அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அறைகலன் கடையில் அதிகாலை நேரத்தில் மூண்ட தீ  

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் அறைகலன் கடை ஒன்றில் தீ மூண்டது. எண் 135 அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு முகவரியில் செயல்பட்டு வந்த அந்தக் கடை நேற்றுக் காலை தீயில் பாதிக்கப் பட்டுவிட்டது. 
அந்தக் கடையில் அதிகாலை 3.33 மணிக்குத் தீ மூண்டதாக தனக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படை ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பல பதிவுகளில் தெரிவித்தது. 
கடையில் மூண்ட தீயை அணைப்பதில் 11 அவசரகால வாகனங்களும் சுமார் 35 தீய ணைப்பாளர்களும் ஈடுபட்டனர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இரண்டு மணி நேரத்தில் அந்தத் தீ அணைக்கப்பட்டதாக வும் மேற்கொண்டும் தீயணைப்புப் பணிகள் தொடர்ந்ததாகவும் சிங் கப்பூர் தற்காப்புப் படை தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக அப்புறப்படுத்தப்பட்ட குடி யிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக் குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். 
தீ மூண்டதை அடுத்து குடி யிருப்பாளர்கள் பலரையும் போலி சாரும் குடிமைத் தற்காப்புப் படையினரும் அப்புறப்படுத்தினர். 
தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. விபத்துக்கான காரணம் பற்றி குடிமைத் தற்காப்புப் படை புலன்விசாரணை நடத்துகிறது. 
இதனிடையே, இந்தத் தீ விபத்து பற்றி தெரிவித்த ராய்ஸ்ட் டன் எஸ்ட்ரோப், 68, என்பவர், கரும் புகை கிளம்பியதை அடுத்து தன் மனைவி தூங்கிக்கொண் டிருந்த தன்னை எழுப்பிவிட்டதாகக் கூறினார்.