அதிவேகத்தில் மரத்தில் மோதிய கார்; சக்கரத்தின் கீழ் சிக்கிக்கொண்ட பெண்

சுமாங் லேனை நோக்கிச் செல்லும் பாதையில் நேற்று காலை 8.48 மணிவாக்கில் பொங்கோல் சென்ட்ரலுக்கு அருகில் கார் ஒன்று, அதிவேகமாக மரம் ஒன்றின் மீது மோதியதாகவும் பின்னர் அந்த காரின் பின்புறம், சாலையைக் கடக்கக் காத்திருந்த பாதசாரிகள் மூவர் மீது மோதியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த கோ செக் கியன் எனும் பொறியாளர் குறிப்பிட்டார். காரிலிருந்த மூவர், விபத்தில் சிக்கிய மூவர் என அறுவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 63 வயது ஓட்டுநர் பின்னர் கைது செய்யப்பட்டார். காயமடைந்தவர்களில் ஒரு மாதின் கால், கார் சக்கரத்தின் கீழ் சிக்கிக்கொண்டதால் அவருக்கு ரத்தம் வடிந்தது. ஹைட்ராலிக் கருவிகளைக் கொண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவரை மீட்டது.