செயற்கைக் கருத்தரிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருமணமான பெண்களுக்கு மட்டுமே ‘ஐவிஎஃப்’ போன்ற செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை கள் சிங்கப்பூரில் செய்யப்படுகின் றன. ஆனால், பல்வேறு காரணங் களுக்காக திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற விரும்பும் சிங்கப்பூர் பெண்கள் பலர் அத்தகைய சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. 
அத்தகைய சிகிச்சைகளுக்காக பிரிட்டன், ஸ்பெயின், கனடா ஆகிய நாடுகளுக்கு அவர்கள் செல்வதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஆண்டில் பிரிட்டனில் உள்ள ‘லண்டன் பெண்கள் மருந்தகம்’, சிங்கப்பூரிலிருந்து  சுமார் 100 பெண்கள் இது குறித்து விசாரித்ததாகக் குறிப்பிட்டது. 2017ஆம் ஆண்டில் இருந்ததைவிட இது இரண்டு மடங்கு எனக் கூறப்படுகிறது. 
கடந்த ஆண்டில் விசாரித்தவர் களில் 10 பேர் செயற்கைக் கருத் தரிப்பு சிகிச்சை மேற்கொண்ட தாகவும் கூறப்பட்டது. 
இத்தகைய சிகிச்சைக்காக ஸ்பெயினில் உள்ள மருத்துவ மனைகளை சிங்கப்பூர் பெண்கள் நாடிய எண்ணிக்கை 2014ஆம் ஆண்டிலிருந்து 2018ல் மூன்று மடங்காகி இருப்பதாக ஐவிஐ-ஆர்எம்ஏ மருத்துவமனை தெரி வித்தது. 2014ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 13 சிங்கப்பூர் பெண்கள் (30லிருந்து 50 வயதுக்குட்பட்ட) செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை பெற்றுக்கொண்டதாக ஐவிஐ-ஆர்எம்ஏ மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்

24 Mar 2019

பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி